மாதம் ரூ.7 லட்சம் சம்பளம் - எந்த இடத்தில் தெரியுமா?
job vacancy in foreign
அதிகளவில் சம்பளம் கிடைக்கும் என்ற நோக்கில் ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். ஆனால் சில நேரங்களில் அவர்களுக்கு பேசிய தொகை சம்பளமாக கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் துபாய் நாட்டில் செயல்படும் பிரபல வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று தற்போது வீட்டு மேலாளர் பணிக்கான வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த பதவிக்கு இந்திய மதிப்பில் ரூ.7 லட்சம் மாத சம்பளமாக வழங்கப்படும் என்றும், இந்த அறிவிப்பு நிஜமான வேலைவாய்ப்பு தான் என்றும், சம்பள விகிதத்தில் எந்த மிகைப்படுத்துதலும் இல்லை எனவும் நிறுவனம் உறுதிபட தெரிவித்துள்ளது.
இந்த பணியில் சேருபவர்கள் வீட்டு பணியாளர்களை மேற்பார்வையிட வேண்டும். அதாவது, வீட்டு பராமரிப்பு பணிகளை ஒழுங்குபடுத்துதல், செலவு திட்டம் மற்றும் நிதி நிர்வாகம், குடும்ப நிகழ்ச்சிகளை திட்டமிடுதல் உள்ளிட்டவை அடங்கும் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயர்தர வீட்டு நிர்வாக அனுபவமுள்ளவர்கள் மற்றும் பல வேலை அழுத்தங்களுக்கு இடையிலும் நேர்த்தியாக செயல்படக்கூடியவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.