தமிழ் வளர்ச்சித் துறையில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
job vacancy in Department of Tamil Development
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான விவரத்தை இங்குக் காண்போம்.
1. அலுவலக உதவியாளர்-
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி.
சம்பளம்: 15,700 – 58,100
2. துப்புரவாளர்
கல்வித் தகுதி : 5 ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: 15,700 – 58,100

3. தோட்டத் துப்புரவாளர்
கல்வித் தகுதி : 5 ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: ரூ. 4,100 – 12,500
தேர்வு செய்யப்படும் முறை:- நேர்முகத்தேர்வு.
விண்ணப்பம் வந்து சேரவேண்டிய நாள்:- விண்ணப்பதாரர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் 26.07.2024 மாலை 5.30 மணிக்குள் தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
முகவரி:
தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி இயக்ககம்,
தமிழ்ச்சாலை, எழும்பூர்,
சென்னை – 600008.
விண்ணப்ப படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறை இணையதளத்தில் (https://tamilvalarchithurai.tn.gov.in/) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
English Summary
job vacancy in Department of Tamil Development