வங்கிகளில் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தெரியுமா?
job vacancy in banks
பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான விவரங்களை இங்குக் காண்போம்.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 20 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ.24,050 – 64,480 வரை
தேர்வு செய்யப்படும் முறை: முதன்மை தேர்வு, மெயின் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையங்கள்:- சென்னை, கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாகர்கோவில்/ கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் அமைக்கப்படும். மெயின்ஸ் தேர்வுகள் சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.08.2025 ஆகும்.
தேர்வு குறித்த அறிவிப்பினை தெரிந்துகொள்ள கேழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை அணுகவும். https://www.ibps.in/wp-content/uploads/DetailedNotification_CRP_CSA_XV_Final_for_Website.pdf