சூரிய ஆய்விலிருந்து சமூக சேவை வரை...! தாய்ப்பள்ளிக்கே புதிய வகுப்பறை கட்டி தந்த நிகர் ஷாஜி..! - Seithipunal
Seithipunal


சூரியனை ஆராயும் நோக்கில் 2023-ஆம் ஆண்டு இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா L-1 விண்கலம் புவி சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு அனைவரையும் கவர்ந்தது.

இந்த முக்கிய திட்டத்தின் இயக்குநராக செயல்பட்டவர், தமிழகத்தின் பெருமை, தென்காசி மாவட்டம் செங்கோட்டை பூர்விகமான டாக்டர் நிகர் ஷாஜி.தாம் கல்வி கற்ற செங்கோட்டை SRM அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்காக ஒரு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டி வழங்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன், ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் நன்கொடையாக வழங்கினார்.

இதனுடன் மாநில அரசு வழங்கிய ரூ.24 லட்சம் இணைந்து, புதிய வகுப்பறை கட்டிடம் அமைக்கப்பட்டது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.விழாவில், விஞ்ஞானி நிகர் ஷாஜி மற்றும் மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர் ஆகியோர் பிரதான விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

பின்னர் பேசுகையில் நிகர் ஷாஜி,“நான் பயின்ற பள்ளிக்கே ஒரு புதிய வகுப்பறை கட்டிடத்தை வழங்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இஸ்ரோவில் அடுத்த 25 முதல் 30 ஆண்டுகளை நோக்கிய பல மேகா திட்டங்கள் தற்போது வடிவமைக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ககன்யான் மனிதர் ஏவுதல் திட்டத்தின் கீழ், மனிதரை விண்வெளிக்கு பாதுகாப்பாக அழைத்து சென்று, மீண்டும் பத்திரமாக பூமிக்கு மீளவும் பல்வேறு பரிசோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு திட்டமும் வெற்றிகரமாக முடிவடைய எங்கள் குழு முழு மனதுடன் உழைத்து வருகிறது. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலை தற்போது உலக தரத்தில் மிக உயர்ந்த நிலையில் உள்ளது” எனத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

From solar research to social service Nikar Shaji built new classroom for his mothers school


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->