சுற்றறிக்கை! பள்ளிகளில் பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்த தடை...! - பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம்
Circular Ban use plastic flags schools Directorate School Education
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும, ''பள்ளிக்கல்வித் துறை இயக்குனரகம்'' சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளது,"வருகிற ஆகஸ்டு 15-ந்தேதி அதாவது நாளை மறுதினம், நாட்டின் சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது.

இதைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தினவிழாவை எழுச்சி மிக்க, மகிழ்ச்சியுடன் நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும். மேலும்,பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்காரம் செய்து தேசியக்கொடி ஏற்றி விழாவை நடத்த வேண்டும்.
இதுதவிர ஊராட்சி மன்ற நிர்வாகிகள்,சுதந்திர போராட்ட தியாகிகள், பெற்றோர், ஆசிரியர் கழக உறுப்பினர்கள், புரவலர்கள் ஆகியோரை அழைத்து விழாவில் பங்குபெற செய்ய வேண்டும்.
அதிலும் குறிப்பாக பிளாஸ்டிக் வகை தேசியக் கொடிகளை கண்டிப்பாக விழாவில் உபயோகிக்க கூடாது. அதேசமயம், தேசியக் கொடியை தலைகீழாக அல்லது கிழிந்த கொடிகளை ஏற்றக்கூடாது.
இதுசார்ந்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Circular Ban use plastic flags schools Directorate School Education