நோட் பண்ணுங்கபா...! 10,11-ம் வகுப்பு மாணவர்களே...துணைத்தேர்வுக்கான தேதி அறிவிப்பு...! - Seithipunal
Seithipunal


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்,  இன்று 2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் வெளியிட்டார்.இதில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.80 %மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

குறிப்பாக மாணவர்கள் 88.70 % மற்றும் மாணவிகள் 95.13 % ஆகும். மேலும், வழக்கத்தை போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். மாணவிகள் 4.14 %அதிகம் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.

இந்நிலையில் 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூலை 4 முதல் துணைத்தேர்வு நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விரும்புவோர் மே 22 முதல் ஜூன் 6-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த துணைத்தேர்வு அட்டவணை இன்றே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, 10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணாக்கர்கள் வரும் 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை விடைத்தாள் நகல்கோரி விண்ணப்பிக்கலாம் எனத்  தெரிவித்துள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10th and 11th grade students Supplementary exam date announcement


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->