அருள்மொழித் தேவர் யார் தெரியுமா..? அவரை பற்றி கூறும் தமிழ் வரலாறு..!
அருள்மொழித் தேவர் யார் தெரியுமா..? அவரை பற்றி கூறும் தமிழ் வரலாறு..!
கி.பி.12-ஆம் நுாற்றாண்டில், இரண்டாம் குலோத்துங்க சோழனின் அவையில், முதல் அமைச்சராகப் பணி புரிந்தவர் குன்றத்துார் சேக்கிழார். பின் சைவத் தொண்டு புரிவதற்காகவே, தன் வாழ்நாளை அர்ப்பணித்தார்.
அருள்மொழித் தேவர் என்பது தான், இவரது இயற் பெயர். சேக்கிழார் குடியில் பிறந்ததால், சேக்கிழார் என்று அழைக்கப் பட்டார். இவர் இயற்றிய திருத்தொண்டர் புராணம் தான், பெரிய புராணம் என்றழைக்கப் படுகிறது. இந்தப் பெரிய புராணம் என்ற இலக்கிய நுால் தான், பனிரெண்டாம் திருமுறையாகப் போற்றப் படுகிறது.

இந்த அற்புதமான, புராண இலக்கியத்தை, கி.பி.1140-ஆம் ஆண்டு, இயற்றியதாகக் கூறப் படுகிறது. இரண்டு காண்டங்களையும், பதிமூன்று சருக்கங்களையும், 4286 விருத்தங்களையும் கொண்டது, இந்த பெரிய புராணம்.
சைவ சமயக் குரவர்களான, சுந்தரர் இயற்றிய திருத்தொண்டர் தொகை, மற்றும் நம்பியாண்டார் நம்பி இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவை தான், இந்தப் பெரிய புராணத்தின் மூல நுால்களாகும்.

63 நாயன்மார்கள் பற்றியும், 9 தொகையடியார்கள் குறித்தும், சேக்கிழார் தனது பாடல்களில் குறிப்பிட்டிருக்கிறார். தன் சம காலத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றியும், தனக்கு முன் உதாரணமாக இருந்தவர்களைப் பற்றிய செய்திகளை எல்லாம் திரட்டி, இந்த நுாலில் இணைத்திருக்கிறார், சேக்கிழார்.
English Summary
Who knows the Arulmozhi God