கணவரை விஷம் வைத்து கொன்ற தலைமை ஆசிரியை..பரபரப்பு வாக்குமூலம்!
The headmistress who poisoned her husband sensational testimony
கணவரை கொலை செய்து உடலை காட்டில் வீசி தீவைத்து எரித்த பள்ளி தலைமை ஆசிரியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த 3 சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 15-ந்தேதி மராட்டிய மாநிலம் சவுசாலா வனப்பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஆண் உடல் மீட்கப்பட்டது.பிணமாக மீட்கப்பட்டவர் யவத்மால் சுயோக்நகரை சேர்ந்த ஆசிரியர் சாந்தனு அரவிந்த் தேஷ்முக் என்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் ஆசிரியரின் மனைவி நிதி தேஷ்முக்கிடம் விசாரித்தபோது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில் ஆசிரியர் சாந்தனு அரவிந்த் தேஷ்முக்கும், நிதி தேஷ்முக்கும் காதலித்து திருமணம் செய்தவர்கள். சாந்தனு அரவிந்த் தேஷ்ஆசிரியராக வேலை செய்த பள்ளியில், மனைவி நிதி தேஷ்முக் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
ஆசிரியர் மது பழக்கத்துக்கு அடிமையாகி தினமும் மது குடித்துவிட்டு வந்து அவர் மனைவியை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த மனைவி, கடந்த 13-ந்தேதி விஷ மாத்திரையை கொடுத்து கணவர் உயிரிழந்தார். இதையடுத்து நிதி தேஷ்முக், தன்னிடம் டியூசன் படிக்கும் சிறுவர்கள் மூலம் சவுலாசா வனப்பகுதியில் கணவரின் உடலை வீசினார்.
அப்போது கணவரின் உடலை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்து விட்டு வீடு திரும்பியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவரை கொலை செய்து உடலை காட்டில் வீசி தீவைத்து எரித்த பள்ளி தலைமை ஆசிரியை நிதி தேஷ்முக்கை கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த 3 சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
The headmistress who poisoned her husband sensational testimony