31-ந் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த திருவிழா துவக்கம்! - Seithipunal
Seithipunal


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவத்தையொட்டி வருகிற 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் 12-ந் தேதி வரை கோவில் சார்பில் திருக்கல்யாணம், தங்கரதம் உலா போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி வசந்த திருவிழா நடத்தப்படுவது வழக்கம், அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி வசந்த திருவிழா வருகிற 31-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 9-ந் தேதி வரை நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் மீனாட்சி-சுந்தரேசுவரர் மாலை  புதுமண்டபம் சென்று அங்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும். 

 10-ம் நாள் விழாவில் மீனாட்சி-சுந்தரேசுவரர் பகலில் புதுமண்டபத்தில் எழுந்தருளி அங்கு பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்..

அதனை தொடர்ந்து  அடுத்த மாதம் 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடைபெறும் திருஞானசம்பந்தர் திருவிழாவில்  திருஞானசம்பந்தர் நட்சத்திரத்தன்று தங்கப்பல்லக்கில் எழுந்தருளி 63 நாயன்மார்கள் நான்கு ஆவணி மூலவீதியில் வலம் வருவர். அதனை தொடர்ந்து அன்று இரவு திருஞானசம்பந்தர் சுவாமிகள் வெள்ளி கோரதத்தில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து  காட்சி அளிப்பர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவத்தையொட்டி வருகிற 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் 12-ந் தேதி வரை கோவில் சார்பில் திருக்கல்யாணம், தங்கரதம் உலா போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படமாட்டாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Vaikasi Vasanth Festival begins on the 31st at the Meenakshi Amman Temple


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->