கம்பிகளில் குத்தி வைக்கப்பட்ட தலை... நுழைந்த கணமே ஒரே கவுச்சி வாடை.. திண்டுக்கலில் நிகழும் திகிலான மர்மம்..? - Seithipunal
Seithipunal



    வெள்ளிக்கிழமையன்று, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாம்பாறை எனும் கிராமத்தில் உள்ள கோயிலுக்குள் நுழைந்தால், ஒரே கவுச்சி வாடை தான்! ஒரு பக்கம், ஆடுகளைப் பலி கொடுத்து விட்டு, அதனை உரித்து, ஒரு கும்பல் கறித் துண்டுகளாக வெட்டிக் கொண்டிருக்கும். இன்னொரு பக்கம், சில ஆண்கள், உரலில் குழம்பு வைப்பதற்காக மசாலாவை அரைத்துக் கொண்டிருப்பார்கள்.

கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சமையல் கூடங்களில், பல ஆண்கள் குழுக்களாகச் சமைத்துக் கொண்டிருப்பார்கள். சமையல் முடிந்ததும், சாப்பாடையும், கறிக் குழம்பையும் படையல் போட்டு விட்டு, பின் சாப்பிடுகிறார்கள்.

 


    

திகிலான இந்தக் கோயில், ஒட்டன்சத்திரத்திலிருந்து, வேடசந்தூர் செல்லும் சாலையில் சென்று பின், திரும்ப மேற்காகப் பயணித்தால், சுமார் 22 கி.மீ. தொலைவில், ஒரு சிறய மலைக் குன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ளது மாம்பாறை முனியப்பன் கோயில். கோயிலின் உள்ளே, சிறிய கருவரையில் உள்ள மூலவரான முனியப்பன் கண்களை மட்டும் திறந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்.

இவரை வணங்கும் போது, குனிந்தோ, அல்லது மண்டியிட்டோ தான் வணங்க வேண்டும். அந்தச் சிறிய கருவரைக்கு முன்னால், ஏகப்பட்ட சூலாயுதங்கள் நெருக்கமாச் செருகப்பட்டிருக்கும்.

அவற்றில் முழுக்க காகிதத்தில் எழுதி, நூலால் கட்டிய வேண்டுதல்களைக் கட்டி விடுகிறார்கள். ஏகப்பட்ட விசிட்டிங் கார்டுகள் குத்தி வைக்கப் பட்டிருக்கின்றன.


  

 இவற்றில் பெரும்பாலானவை, கடனை வாங்கி, ஒழுங்காக பணம் தராமல் இழுத்தடிப்பர்களைப் பற்றி எழுதி, அவர்களது விசிட்டிங் கார்டுகளைச் சொருகி வைத்து வேண்டுதல் வைக்கிறார்கள்.

அவ்விதம் கட்டப்படும், வசூலாகாத கடன் பாக்கிகள், முனியப்பனிடம் முறையிட்டவுடன் பணம் வசூலாகி விடுமாம்! அதற்கு நேற்றிக் கடனாகத் தான் ஆடு மற்றும், சேவலைப் பலி கொடுக்கிறார்கள். இவ்வாறான வேண்டுதல்களை முனியப்பன் நிறைவேற்றியதும், நோத்திக் கடனை முறையாகச் செய்து விடுகிறார்கள்.
    

வேண்டுதல் நிறைவேற கொண்டு வரப்படும், ஆடுகளை, கோயிலின் முன்பாக பலியிடுகிறார்கள். இந்த மாதிரி பலியிடப்படும் சேவல்களின் தலைகளை, கோயிலுக்கு முன்பாக உள்ள வேல் கம்பிகளில் குத்தி வைத்து விடுகிறார்கள்.

பின் தடபுடலான அசைவ உணவு தயாராகிறது. முனியப்பனுக்கு, முதலில் படைத்து விட்டு, பின் உடன் வந்தவர்களுடன் விருந்து சாப்பிடுகிறார்கள்.

இந்தக் கோயில் வளாகத்திற்குள் ஆண்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள். பெண்கள் வருவதில்லை. அவ்வாறு பெண்கள் வந்தால், அவர்களுக்கென ஒரு எல்லையை வைத்திருக்கிறார்கள். அதற்கு வெளியே தான் பெண்கள் நின்றிருக்க வேண்டும்.


  

 பூசாரி மட்டும் தீபாரதனைத் தட்டுடன் வந்து, விபூதி கொடுத்து விட்டுச் செல்வார். இந்தக் கோயிலில் ஆடு, சேவல்களை அறுப்பது, சமைப்பது, பரிமாறுவது எல்லாமே ஆண்கள் மட்டும் தான். ஆண்களைத் தவிர பெண்கள் கோயில் வளாகத்திற்குள் வந்தால், முனியப்பனுக்கு கோபம் வந்து, கடும் தண்டனை கொடுத்து விடுவதாகச் சொல்கிறார்கள்.

வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆண்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். பஸ் வசதி அதிகம் இல்லாததால், ஏகப்பட்ட வாகனங்கள் வருகின்றன.

இவர்களில் பெரும்பாலோனோர் வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள், வசதி படைத்த விவசாயப் பின்னணியைச் சேர்ந்தவர்கள்.


    

ஆதனால், விலை உயர்ந்த கார்களை எல்லாம் இந்தக் கோயில் வளாகத்தில் சர்வசாதாரணமாகப் பார்க்க முடிகிறது.

கோயில் வாசலில் உள்ள பூதகணங்கள் கூட நம்மைப் பயமுறுத்தும் விதத்தில் தான் தோற்றம் அளிக்கின்றன.

இங்கு பின்பற்றப்படும் நடைமுறைகளும், பூஜை முறைகளும் வித்தியாசமாக இருக்கின்றது. ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த முனியப்பனை, சுற்றுப் பகுதியில் உள்ள ஆண்கள்; எல்லாம் வந்து தொடர்ந்து வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கடன் தொகையை வசூலித்து தருவதில், இந்தக் கடவுள் சிறந்தவராக இருப்பதால், இங்கு வரும் ஆண்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

situated near Markampatti village which is about 20 km from Ottan Chathiram


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->