பொங்கட்டும் பொங்கல்.. வாழ்வில் இனிமை நிறைய.. வந்தது பொங்கல்.! - Seithipunal
Seithipunal


சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தை கடைபிடிப்பார்கள். தை முதல் நாளன்று இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், விவசாயத்திற்கு உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர்.

இதுவே நாளடைவில் நான்கு தினங்கள் கொண்டாடும் பொங்கல் கொண்டாட்டமாக மாறியது.

பொங்கல் பண்டிகையை பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் சம்பந்தபட்டதாகவே இருந்துள்ளது என்பது யாரும் மறுக்க இயலாத உண்மையாக இருந்து வருகிறது. இந்திர விழா என்ற பெயரில் இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது. இப்போது போகிப்பண்டிகை, தைப்பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது.

இவ்விழா நாளில் பகைமை, பசி நோய் நீங்க இறைவன் பிரார்த்தனை செய்யப்பட்டது. மழைக்குரிய தெய்வம் இந்திரன், அவரை வழிபட்டால், மாதம் மும்மாரி மழை பெய்து பயிர் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

தைப்பொங்கல் என்பது நமக்கு நெல்லை விளைவிக்க எவையெல்லாம் உதவியதோ அவற்றிற்கெல்லாம் நன்றிகூறி வழிபடுவது. புதிதாக விளைந்த நெல்லை அறுவடை செய்து அரிசியாக்கி பொங்கலிட்டு இயற்கை தெய்வத்திற்கும், சூரியன், மாடு உட்பட உதவிய எல்லாவற்றிற்கும் நன்றி செலுத்துவதே பொங்கல். இந்தப் பண்டிகை தொடர்ச்சியாக நான்கு நாட்கள், நகரம் முதல் கிராமங்கள் வரை விழாவாக கொண்டாடப்படுகிறது.

1. முதல்நாள் போகிப் பண்டிகை. இந்நாள் இந்திரனுக்காக ஆயர்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.

2. இரண்டாம் நாள் சூரியன் பொங்கல். சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகையாகும்.

3. மூன்றாம் நாள் மாட்டுப்பொங்கல். உழவுத்தொழிலுக்கு துணையாக விளங்கிய இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி கூறும் நாளாகும்.

4. நான்காம் நாள் காணும் பொங்கல்.

அறுப்புக் களத்தில் அறுத்த நெற்கதிர்களில் சிலவற்றை அழகாகப் பின்னி ஒரு அலங்காரம் போல் செய்து (அதிலிருக்கும் நெல் மணிகளுக்கு கொஞ்சமும் சேதம் வராமல்) அதை வீட்டின் முன் வாசலில் தொங்க விடுவார்கள். சிறு சிட்டுக் குருவிகள் அந்த நெற்கதிர்களை அவற்றின் மேலேயே அமர்ந்து கொத்தித் தின்னும். அப்போது அந்த நெற்கதிர் பின்னல் ஆடுவதை பார்க்க அந்தக் குருவி ஊஞ்சலாடுவது போல் அவ்வளவு அழகாக இருக்கும்.

குருவிகளுக்காகவேதான் அவற்றைப் பின்னுவார்கள். தனக்குக் கிடைத்த உணவை மற்ற உயிரினங்களோடும் பகிர்ந்துண்ணும் தமிழனின் பெருந்தன்மை அதில் தெரியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pongal special 2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->