பிரதிபலன் எதிர்பார்க்காமல், மற்றவருக்கு உதவி செய்து பாருங்கள்….நீங்கள் எதிர்பாராத சமயத்தில்….அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்….இது உங்கள் உதவியின் சக்தி….! நம்புங்கள்….! - Seithipunal
Seithipunal


பிரதிபலன் எதிர்பார்க்காமல், மற்றவருக்கு உதவி செய்து பாருங்கள்….நீங்கள் எதிர்பாராத சமயத்தில்….அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்….இது உங்கள் உதவியின் சக்தி….! நம்புங்கள்….!

பிச்சைக்காரன் வந்து, நம்மிடம் பிச்சை கேட்டால், ஒரு ரூபாயோ, இரண்டு ரூபாயோ போடுவோம். ஆனால், அந்தப் பிச்சைக்காரனையோ, நாம் கொடுத்த ஒரு ரூபாயோ நம் நினைவில் இருக்காது.

ஆனால், அவன் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு, “நீங்களும் உங்க குடும்பமும், நல்லா இருக்கணும், என்று வாழ்த்துவான்”. அந்த வாழ்த்து தான், நம்மை, பல முறை, பல ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.

அப்படி எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், நாம் செய்யும் உதவிக்குப் பெயர் தான் தர்மம்.

அதைத் தான், “தர்மம் தலை காக்கும்” என்று ஆன்றோர் சொன்னார்கள்.

இதைத் தான் நம் அவ்வைப் பாட்டியும், தன் மூதுரையில்,

“நன்றி ஒருவர்க்குச் செய்தக்காலன்றி

என்று தருங்கொ லெனவேண்டா – நின்று

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தான் தருதலால்”

என்று அழகாகப் பாடி உள்ளார்.

ஒருவருக்கு உதவி செய்யும் போது, பிரதிபலனை எதிர்பார்த்துச் செய்யாதே. ஆனால், அதன் பராபலன், உன்னைத் தானாக வந்தடையும்.

“தரையில் தான் உண்ட நீருக்காக, தன் தலையில், இளநீரைச் சுமந்து தருகிறதே, தென்னை மரம். அது போல, நாம் செய்யும், நல்ல உதவிகள், நாம் எதிர்பாராத போது, நமக்கு நல்ல சமயத்தில் உதவும்”

-மதுரை ராஜா -


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

help to helpless


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->