தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் கொண்டாட சில டிப்ஸ்.!! - Seithipunal
Seithipunal


சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி பண்டிகை. பண்டிகைகளை கொண்டாடும் உற்சாகத்தில் நாம் சில விஷயங்களை கவனிக்க மறந்து விடுகிறோம். அதனால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு பண்டிகை காலத்தை மோசமான நிகழ்வுகளாக மாற்றக்கூடும்.

தீபாவளி கொண்டாட்டத்தின் போது எழும் பிரச்சனைகளுக்கு நான்கு முக்கிய காரணங்கள் உண்டு. அவை 

தீ

ஒலி மாசுபாடு

காற்று மாசுபாடு மற்றும்

கலோரி நிறைந்த உணவுகள்

தீ ஆபத்து :

தீபாவளி பண்டிகையில் ஆபத்தை உண்டாக்கும் முதல் காரணி நெருப்பு. பண்டிகையின்போது பல்வேறு காரணங்களால் நெருப்பின் மூலம் ஆபத்து ஏற்படலாம். நெருப்பினால் ஏற்படும் காயத்தை தவிர்க்க...

திறந்தவெளியில் பட்டாசுகளை வெடிக்க செய்யுங்கள்.

குப்பைகள் மற்றும் எரியக்கூடிய பிற பொருட்களின் அருகில் நின்று பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.

பருத்தி ஆடைகளை அணிந்து கொண்டு பட்டாசுகளை வெடியுங்கள்.

பட்டாசு வெடிக்கும்போது எப்பொழுதும் காலணிகளை அணிந்திருங்கள்.

வெடித்து முடித்த பட்டாசுகளை ஒரு வாளி மணலில் அல்லது தண்ணீரில் முக்கி எடுத்து அப்புறப்படுத்துங்கள்.

எளிமையான தீக்காயத்தின்போது, உடனடியாக அந்த இடத்தை குழாய் நீரில் கழுவவும். ஆனால், தீவிர தீக்காயமாக இருந்தால் மருத்துவ உதவியை நாடுங்கள்.

ஒலி மாசு :

பட்டாசுகளிலிருந்து வெளிப்படும் சத்தமானது காது சவ்வை சேதப்படுத்தும் மற்றும் தற்காலிக அல்லது நிரந்தர செவித்திறன் குறைபாட்டை ஏற்படுத்தும்.

ஒலி மிகவும் சத்தமாகவும், தாங்கமுடியாததாகவும் இருந்தால் காது செருகிகளைப் பயன்படுத்தவும். குறைந்த ஒலி பட்டாசுகளை தேர்ந்தெடுத்து வாங்குங்கள்.

அரசாங்க அதிகாரி ஆக வேண்டும் என்பது உங்கள் கனவா? வரவிருக்கும் காவலர் தேர்வில் சிறப்பாக பயிற்சி செய்து வெற்றி பெற்றிடுங்கள்.

காவலர் தேர்வில் வெற்றி பெற இப்பொழுதே பயிற்சி புத்தகத்தை பெற்றிடுங்கள்.

புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்

காற்று மாசு :

பட்டாசுகளிலிருந்து வரும் தூசி மற்றும் ரசாயனங்கள் கண்களை எரிச்சலடைய செய்யலாம். கண்களில் எரியும் உணர்வு ஏற்பட்டால், கண்ணை தண்ணீரில் கழுவ வேண்டும்.

சுவாச பிரச்சனைகள் உள்ளவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரும்போது பாதுகாப்பு முகமூடிகளை அணியுங்கள்.

ஒவ்வாமைகளை தவிர்க்க, பட்டாசுகளை கையாண்ட பிறகு கைகளையும், கால்களையும் நன்கு கழுவுங்கள்.

உயர் கலோரி மற்றும் சர்க்கரை உணவுகள் :

தீபாவளியின் போது இனிப்புகள் மற்றும் தின்பண்டங்கள் பிரதானமானவை.

அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்தை தடுக்க சர்க்கரை மற்றும் எண்ணெய் சுவையான உணவுகளை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்கவும்.

அதிக அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் நீர்சத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

இனிப்புகள் மற்றும் பிற ஆரோக்கியமற்ற தின்பண்டங்களுக்கு மாற்றாக ஆரோக்கியமான நட்ஸ் மற்றும் உலர்ந்த பழங்களை தேர்ந்தெடுக்கவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

diwali sepcial 2020


கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!
Seithipunal