சிறுவயதில் காது குத்துவதால் இவ்வளவு நன்மைகளா.? பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்.!
Benefits of kathu kuthuthal
சிறுவயதில் காதுகுத்தி கம்மல் அணிவிக்கும் பழக்கம் தமிழர்களிடையே பின்பற்றப்பட்டு வருகிறது. ஆன்மீக ரீதியாக இதற்கு சில காரணங்கள் இருந்தாலும், அறிவியல் ரீதியாக உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. அதன்படி தமிழர்கள் பின்பற்றும் காது குத்துவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
காதுகுத்தி கம்மல் அணியும் பகுதியில் இருக்கும் 'மெரிடியன்' புள்ளி மூளையில் உள்ள இடது எம்மிஸ்பியர் பக்கத்தை வலது பக்கத்தோடு இணைப்பதற்கு உதவுகிறது. அந்த இடத்தில் காது குத்துவதால் மூளையின் செயல் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கிறது. அதன் காரணமாகத்தான் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே காது குத்துகிறார்கள்.
காது குத்துவதன் மூலம் ஆற்றல் சரி சமமாக உடல் முழுவதும் பரவுவதாக கூறப்படுகிறது. மேலும் பெண்களுக்கு குழந்தை பிறக்கும்போது ஏற்படும் வலியையும் இந்த புள்ளியை தூண்டுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என கூறப்படுகிறது.
2 காதுகளிலும் குத்துவதால் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி குறைகிறது. அதன் காரணமாக தான் பெண்கள் தங்களது இரண்டு காதலிலும் கம்மல் அணியும் படி அறிவுறுத்தப்படுகிறது.

காது மடல் என்னும் இடத்தில் கண் பார்வையில் இணைப்பு புள்ளி உள்ளது. அந்த இடத்தில் காது குத்துவதால் பார்வை திறன் மேம்படுகிறது.
காது குத்துவதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் சீராகிறது. அதன் காரணமாக சரியான விகிதத்தில் மூளைக்கு ரத்தம் செல்கிறது. மேலும் மூளையின் மன ஆற்றல் மற்றும் மன நலத்தையும் பாதுகாக்கிறது.
காது குத்துவதால் பதற்றம் மற்றும் மனக் கவலையை போக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதன் காரணமாகத்தான் நம்முடைய முன்னோர்கள் காது குத்துவதை பாரம்பரியமாக மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பின்பற்றியுள்ளனர்.
English Summary
Benefits of kathu kuthuthal