பொறியியல் படிப்பு! தேதி மாற்றம்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அமைச்சர்!
be counselling date announcement
பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வரும் 25-ம் தேதி வெளியாகும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 15ஆம் தேதி துவங்கிய பொறியியல் கலந்தாய்வுக்கான ஆன்லைன் பதிவு, ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி வரை மாணவர்கள் ஆன்லைனில் கலந்தாய்வுக்காக பதிவு செய்தனர். இதனை அடுத்து சான்றிதழ் பதிவேற்றம் மட்டும் ரேண்டம் எண் வெளியிடப்பட்டது.
இதற்கிடையே, செப்டம்பர் மாதம் 17ம் தேதி (இன்று) பொறியியல்படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய மாணவர்கள் காலம் அவகாசம் கோரியதை அடுத்து, தற்போது அந்த தரவரிசை பட்டியல் வரும் 25ம் தேதிக்கு வெளியிடப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் அக்டோபர் முதல் வாரத்தில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
English Summary
be counselling date announcement