கடன் சுமை தாங்காமல் தாய் எடுத்த கொடூர முடிவு…! 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து உயிரிழந்த சோக சம்பவம்...! நடந்தது என்ன...? - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகிலுள்ள மாடம்பாக்கம் வள்ளலார் நகரில் வாழ்ந்து வந்த ஷாம்ஷியா (26), வாழ்க்கை சுமைகளின் பாரத்தில் சிக்கித் துயரமான முடிவை எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவர் ஆசிப் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் ஒரு வருடத்திற்கு முன்பு உயிரிழந்த நிலையில், இரு குழந்தைகள் ஆசிபா (10), அப்சர் (5) உடன் தனியாக வாழ்க்கையை முன்னெடுத்து வந்தார்.

இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்த ஷாம்ஷியா, கடன் சுமையால் மனஅழுத்தத்தில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் குழந்தைகளுடன் சென்னை கொளத்தூரில் தங்கி, அவர்களின் படிப்பை தொடரச் செய்தார். இந்நிலையில், “தாய் வீட்டிற்கு செல்கிறேன்” என கூறி குழந்தைகளுடன் வெளியேறிய அவர், அங்கு சென்றதே இல்லை.அடுத்த நாள் காலை, மாடம்பாக்கம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் மூன்று உடல்கள் மிதப்பதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த தகவல் அறிந்த மணிமங்கலம் காவலரும், மறைமலைநகர் தீயணைப்பு படையினரும் விரைந்து சென்று உடல்களை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பின்னர் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் ஷாம்ஷியா மற்றும் அவரது இரு குழந்தைகள் என்பது உறுதி செய்யப்பட்டது.இதனிடையே, ஷாம்ஷியா எழுதியதாக தெரிவிக்கப்படும் கடிதம் காவலர்களிடம் கிடைத்துள்ளது.

அதில், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்யப்போவதாக குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த சம்பவம் தொடர்பாக மணிமங்கலம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, உண்மையில் கடன் சுமையே காரணமா அல்லது வேறு பின்னணி ஏதும் உள்ளதா என்ற கோணத்தில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இரு சிறு குழந்தைகளுடன் தாய் உயிரிழந்த இந்த சோக சம்பவம், அப்பகுதி மக்களின் மனதை உலுக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mother made cruel decision to not be able bear burden debt tragic incident where she jumped well 2 children and died


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->