டிஜிட்டல் கைதின் கொடூரம்! 6 மாதத்தில் பெங்களூரு பெண்ணிடம் ₹33 கோடி பறித்த சைபர் கும்பல்! - Seithipunal
Seithipunal


பெங்களூருவை சேர்ந்த 57 வயது பெண் ஒருவர், ஆறு மாதங்களுக்கும் மேலாக “டிஜிட்டல் கைதின்” பிடியில் சிக்கி, நம்ப முடியாத அளவான ₹33 கோடி சொத்துகளை மோசடிகளில் இழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சம் கண்டுள்ளது.

“டிஜிட்டல் கைது” எனப்படும் புதிய சைபர் குற்றத்தில், குற்றவாளிகள் சிபிஐ, போலீஸ் அல்லது அரசு அமைப்புகளின் அதிகாரிகள் போல் நடித்து வீடியோ/ஆடியோ அழைப்புகளின் மூலம் பயமுறுத்தி, பாதிக்கப்பட்டவர்களை முற்றிலும் மன ரீதியாக கட்டுப்பாட்டில் வைத்துப் பணம் பறிப்பது வழக்கம்.

இந்த சம்பவத்திலும், சிபிஐ அதிகாரிகள் என போலித்தனமாக நடித்த மோசடி கும்பல், அந்த பெண்ணை தொடர்ந்து வீடியோ கண்காணிப்பில் வைத்து, குடும்பத்திற்கும், மகனின் வரவிருக்கும் திருமணத்திற்கும் ஆபத்து உண்டு என்று கூறி மிரட்டியது. எந்த சூழலிலும் போலீசிடம் தகவல் சொல்லக்கூடாது என்று எச்சரித்து, அவரை முழுமையாக மன அழுத்தத்தில் ஆழ்த்தினர்.குற்றவாளிகளின் உத்தரவின்படி அவர் மொத்தம் 187 தனிப்பட்ட வங்கி பரிமாற்றங்கள் மூலம் ₹31.83 கோடி பணத்தை மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஆறு மாதத்துக்கும் மேலான இந்த மன-உடல் கொடுமையால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, ஒரு மாதம் மருத்துவ சிகிச்சை பெற்று மீள வேண்டிய நிலை ஏற்பட்டது.உடல்நலம் சற்று குணமடைந்த பின்னர், இந்த அரியணைக்கு உரிய மோசடியில் சிக்கிய பெண் போலீசில் அதிகாரப்பூர்வ புகார் அளித்து, குற்றவாளிகளை விரைவாக பிடிக்க வலியுறுத்தியுள்ளார். தற்போது இந்த பெரும் அளவிலான சைபர் மோசடி குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cruelty digital imprisonment Cyber ​​gang extorts 33 crore from Bengaluru woman in 6 months


கருத்துக் கணிப்பு

பிஹார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

பிஹார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்குமா?




Seithipunal
--> -->