திருமணத்திற்கு 5 நாட்கள் முன் விபத்து...! - அழைப்பிதழ் கொடுக்க சென்ற புதுமாப்பிள்ளை உயிரிழப்பு...! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பெங்களூரு பனசங்கரி பகுதியில் வசித்து வந்த 27 வயதான அக்சித், தனது சொந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தை நடத்தி வந்த இளைஞர். வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கத் தயாராகியிருந்த அவருக்கு, ஒரு இளம் பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வருகிற 30-ந்தேதி திருமணம் நடைபெற ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துகொண்டிருந்தன. அதற்குமுன்னர் 29-ந்தேதி மாலை திருமண வரவேற்பு விழாவும் உற்சாகமாக திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த மகிழ்ச்சிக் காலத்தில், தனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் திருமண அழைப்பிதழ்களை வழங்குவதற்காக அக்சித் உளிமாவு பகுதிக்கு சென்றிருந்தார். அங்கு வசிக்கும் நண்பரை சந்தித்த அவர், அருகிலுள்ள கோதண்டராம சாமி கோவிலில் நடைபெற்ற தேர்த்திருவிழாவையும் ஆர்வத்துடன் கண்டுகளித்தார்.

அழைப்பிதழ்களை வழங்கி முடித்தபின் வீடு திரும்பத் தயாரான அக்சித்திடம், அதிகாலையில் நடைபெறும் பல்லக்கு ஊர்வலத்தையும் பார்த்துவிட்டு செல்லுமாறு நண்பர் அறிவுறுத்தியதால், அவர் அந்த இரவு நண்பர் இல்லத்திலேயே தங்கினார். மறுநாள் அதிகாலை, பக்தி உணர்வுடன் நடைபெற்ற பல்லக்கு ஊர்வலத்தை காண அக்சித் தனது நண்பருடன் சென்றார்.

அப்போது காலை 5 மணியளவில் டிராக்டரில் கொண்டு வரப்பட்ட பல்லக்கு ஊர்வலத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துகொண்டிருந்த அக்சித், எதிர்பாராதவிதமாக டிராக்டர் மோதியதில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் உயிரை காக்க முடியாமல் அக்சித் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காாவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட ஆய்வில், பல்லக்கு ஊர்வலத்தில் டிராக்டர் ஓட்டுநர் கவனக்குறைவாக இயக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து காாவலர்கள் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய டிராக்டர் ஓட்டுநரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், திருமண அழைப்பிதழ் வழங்கச் சென்ற புதுமாப்பிள்ளை, திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன்பே உயிரிழந்த இந்த பரிதாப சம்பவம், அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Accident 5 days before wedding Newlywed dies after going deliver invitations


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->