எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள்., நடிகர் வில் ஸ்மித் வெளியிட்ட உருக்கமான பதிவு.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் ஹாலிவுட் டால்பி திரையரங்கத்தில் அகாடமி விருது (ஆஸ்கர் விருது) வழங்கும்  விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது.  சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை வழங்குவதற்காக கிரிஸ் ராக் என்ற நகைச்சுவை நடிகர் மேடையேறினார். 

அப்போது நகைச்சுவை செய்வதாக நினைத்துக் கொண்டு,  நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கெட்டின் தலைமுடி பிரச்சினையை கிரிஸ் ராக் கிண்டல் செய்தார். ஜடாவுக்கு alopecia என்ற முடி உதிரும் நோய் இருக்கிறது. 

கிரிஸ்ராக்கின் நகைச்சுவைக்கு பெரிய வரவேற்பு இல்லை. வில்ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படுவதால் அதை வாங்குவதற்காக வந்திருந்தார்.  கிரிஸ் ராக்கின் நகைச்சுவையைக் கேட்டு வில்ஸ்மித் ஆரம்பத்தில் சிறிது சிரித்தார். ஆனால், அருகிலிருந்து அவரது மனைவியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிவதைப் பார்த்து கொதித்துப் போனார்.

உடனடியாக மேடையில் ஏறிய  வில் ஸ்மித் கிரிஸ்ராக்கின் கன்னத்தில் பளார் என அறைந்தார். வில் ஸ்மித்தின் இந்த செயலுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர கிளம்பியது. தற்போதுவரை இதுகுறித்து சமூகவலைத்தளங்களில் விவாதம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடிகர் வில் ஸ்மித் தந்து முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "வன்முறை அதன் அனைத்து வடிவங்களிலும் விஷம் மற்றும் அழிவு. நேற்றிரவு நடைபெற்ற அகாடமி விருதுகளில் எனது நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மன்னிக்க முடியாதது. 

ஜடாவின் மருத்துவ நிலை பற்றி ஒரு நகைச்சுவை எனக்கு தாங்க முடியாத அளவு இருந்தது மற்றும் நான் உணர்ச்சிப்பூர்வமாக எதிர்வினையாற்றினேன்.

நான் உங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன், நான் தவறு செய்துவிட்டேன். நான் சங்கடப்படுகிறேன், எனது செயல்கள் நான் விரும்பும் மனிதரைக் குறிக்கவில்லை. அன்பும் கருணையும் கொண்ட உலகில் வன்முறைக்கு இடமில்லை.

நான் அகாடமி, நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். 

வில்லியம்ஸ் குடும்பத்திடம் மற்றும் என் அரசர் ரிச்சர்ட் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். அழகான பயணமாக இருந்ததைக் கறை படிந்ததற்கு நான் ஆழ்ந்த வருந்துகிறேன்" இவ்வாறு நடிகர் வில் ஸ்மித் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

will smith say about Oscar incident


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->