ஒன்றியத்தின் தப்பாலே, ஒன்னியும் இல்ல இப்பாலே.. ஒன்றியம் வார்த்தைக்கு விளக்கம் அளித்த கமல் கமல்ஹாசன்.!!
vikram movie press meet kamal speech
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் விக்ரம். இப்படத்தின் முதல் பாடல் பத்தல பத்தல சமீபத்தில் வெளியானது. இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த பாடலை கமல் எழுதியும், பாடியும் உள்ளார். இந்த பாடல் வரிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

ஒருபுறம் பாடலுக்கு வரவேற்பு இருந்தாலும், மறுபுறம் விமர்சனங்கள் எழுந்தது. பாடலில் அரசியல் வரிகள் உள்ளது. திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்து வருகிறது. இந்தப் பாடலில் கமல் ஒன்றியத்தின் தப்பாலே, ஒன்னியும் இல்ல இப்பாலே, சாவி இப்போ திருடன் கையிலே என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று சென்னையில் விக்ரம் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கமல்ஹாசனிடம் ஒன்றியம் வரிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல் ஹாசன், தமிழில் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளது. ஒன்றியம் என்ற வார்த்தைக்கு பதில் பல வார்த்தைகள் உள்ளது. பத்திரிக்கையாளர் இணைந்துள்ள இந்த கூட்டம் கூட ஒன்றியம் தான். இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வைத்துள்ள சங்கம் கூட ஒன்றியம் தான். படம் வெளியான பிறகு இதற்கான அர்த்தங்கள் தெரியும் என தெரிவித்துள்ளார்.
English Summary
vikram movie press meet kamal speech