பிக்பாஸ் பிரஜின் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை தொடங்கி வைத்த விஜய் சேதுபதி! படத்தோட பேரு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க! - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு கவனம் ஈர்த்த பிரஜின், தற்போது ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படமான ஊருக்கு ரெண்டு ஊதாரி-யின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த பூஜை விழா சென்னையில் நடைபெற்றது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பல பிரபலங்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் குவிவது வழக்கம். அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தியவர்களாக ஹரிஷ் கல்யாண், கவின், ரியோ ஆகியோர் இன்று கவனிக்கத்தக்க ஹீரோக்களாக உருவெடுத்துள்ளனர். அதே நேரத்தில், அந்த புகழை சரியாக பயன்படுத்திக்கொள்ளாதவர்கள் குறுகிய காலத்திலேயே திரையுலக கவனத்திலிருந்து விலகி விட்டதையும் பார்க்க முடிகிறது. இதற்கு உதாரணமாக ஓவியா அடிக்கடி குறிப்பிடப்படுகிறார்.

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 9 மூலம் அடையாளம் பெற்ற பிரஜின், தனது சினிமா கம்பேக்காக ‘ஊருக்கு ரெண்டு ஊதாரி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை யோகேஸ்வரன் மைனர் இயக்குகிறார். பிரஜினுடன், விஜய் டிவி நட்சத்திர புகழும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், பிக் பாஸ் மூலம் பிரபலமான ஜனனி இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் பூஜை விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி கலந்து கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பிரஜினும் விஜய் சேதுபதியும் நெருங்கிய நண்பர்கள். சினிமாவுக்கு வருவதற்கு முன், விஜய் சேதுபதி சீரியலில் நடித்த காலத்தில் பிரஜினுடன் இணைந்து நடித்துள்ளதிலிருந்தே இவர்களுக்குள் நட்பு தொடர்கிறது. பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் மூலம் அந்த நட்பு மேலும் வலுவடைந்ததாக கூறப்படுகிறது.

‘ஊருக்கு ரெண்டு ஊதாரி’ திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். ஏ.ஆர்.கே. புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஒளிப்பதிவாளராக ராஜா பட்டாசார்ஜி, படத்தொகுப்பாளராக செந்தமிழ்ச் செல்வன் பணியாற்றுகின்றனர். ஸ்டண்ட் இயக்குநராக மிரட்டல் செல்வா, கலை இயக்குநராக மணிகண்டன் இணைந்துள்ளனர். பாடல்களை சினேகன் எழுதுகிறார். படத்தை ராமகிருஷ்ணன் மற்றும் வினோத் பெருமாள் இணைந்து தயாரிக்கின்றனர்.

பிக் பாஸ் மூலம் கிடைத்த அடையாளத்தை, இந்தப் படத்தின் மூலம் பிரஜின் சரியான திசையில் பயன்படுத்திக் கொண்டு ஒரு வலுவான கம்பேக் கொடுக்கப் போகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay Sethupathi has launched a new film in which he will play the hero of Bigg Boss Prajn


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->