உறுதியான முடிவை வெளியிட்ட விஜய் சேதுபதி.?! பரபரப்புக்கு முற்றுப்புள்ளி.!  - Seithipunal
Seithipunal


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படமாக்க முடிவு செய்யப்பட்டது. இந்த படத்திற்கான நடிகர்கள் மற்றும் நடிகைகள் தேர்வு நடைபெற்று வந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது. 

இந்த விஷயத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பவே, இரண்டு நாட்களுக்குள் இது குறித்து முடிவெடுக்க உள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி 800 திரைப்படத்தில் நடிப்பது தொடர்பாக யோசனை செய்து முடிவெடுக்க வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு " முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி யோசனை செய்ய வேண்டும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவரது எதிர்காலத்திற்கு அதுவே நல்லது. " என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதி 800 படத்தில் இருந்து விலகுவதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டு இருந்தார். இந்த நிலையில், தனக்கு நெருங்கிய இயக்குநர்களை அழைத்து அவர் இந்த ஆலோசனையில் ஈடுபட்ட பின், 800 படத்தில் இருந்து அவர் விலகுவதாக முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay sethupathi got decision about 800 movie


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal