'கூழாங்கல்' படத்தை ஏன் திரையிடவில்லை! விக்னேஷ் சிவன் விளக்கம்! - Seithipunal
Seithipunal


அறிமுக இயக்குனரான பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கூழாங்கல்'. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை நயன்தாரா-விக்னேஷ் சிவனின் 'ரவுடி பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்த திரைப்படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்ற நிலையில் இயக்குனரும் தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் பேசிய போது தெரிவித்திருப்பதாவது, ''ரவுடி பிக்சர்ஸ் என்ற பேனரை ஆரம்பிக்கலாம் என நினைத்தபோது நாங்கள் எடுத்த முதல் திரைப்படம் கூழாங்கல். 

இயக்குனர் ராம் சார் எனக்கு குரு போன்றவர். அவர்தான் இந்த படம் தொடர்பாக என்னிடம் பேசினார். இந்த படம் பார்த்ததும் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. 

பல திரைப்பட விழாக்களில் உலக அளவில் பார்வையாளர்களுக்கு திரையிட்ட போது அவர்களுக்கு பிடித்திருந்தது. 

இந்த திரைப்படம் எங்களுக்கு அதிக பெருமையை ஈட்டி கொடுத்துள்ளது. இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக எங்களின் முதல் திரைப்படம் தேர்வாகி இருப்பது மகிழ்ச்சி. 

இத்தனை அங்கீகாரம் எங்கள் முதல் படத்திற்கு கிடைத்திருக்கிறது என்பது பெருமை. இதனை உருவாக்கிய இயக்குனர் வினோத்திற்கும் படத்தில் நடித்த கருத்தடையான், செல்லப்பாண்டி இருவருக்கும் நன்றி. 

இந்த திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால் அதற்கு நேரம் தாண்டி போய்க் கொண்டே இருந்ததால் இப்போது ஓடிடி வெளியிடுகிறோம்'' என்றார். 

இது தொடர்பாக இயக்குனர் வினோத் ராஜ் பேசிய போது தெரிவித்திருப்பதாவது, ''இந்த திரைப்படத்தை முடித்துவிட்டு அடுத்த கட்டத்திற்கு எப்படி எடுத்துச் செல்லலாம் என பார்த்துக் கொண்டிருந்த போது ராம் அண்ணா கோவா திரைப்பட விழாவில் படத்தைப் பார்த்துவிட்டு ஊக்கப்படுத்தி எங்களை நயன்-விக்னேஷ் சிவன் அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். 

அவர்களுக்கும் படம் பிடித்தததால் படத்தை உயரத்திற்கு எடுத்துச் சென்றார்கள். அவர்களுக்கும் என் பட குழுவிற்கும் மிக்க நன்றி. படத்தை பார்த்துவிட்டு ரசிகர்களாகிய நீங்கள் என்ன கருத்து தெரிவித்தாலும் அதனை ஏற்றுக் கொள்கிறோம்'' என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vignesh Shivan speech goes viral


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->