#SoulOfVarisu || வாரிசு படத்தில் "அம்மா" பாடல் வீடியோ வெளியீடு..!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவான வாரிசு திரைப்படத்திற்கு தமன் இசையமைத்தார்.

இவரது இசையில் வெளியான அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியான வாரிசு படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

உலகம் முழுவதும் 5 மொழிகளில் வெளியான வாரிசு படம் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் தமன் இசையில் வாரிசு படத்தில் இடம்பெற்ற மனதை உருக்கும் அம்மா பாடலை பாடகி சித்ரா பாடியிருந்தார்.

பாடலாசிரியர் விவேக் எழுதிய இந்த பாடலின் வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விஜயின் ரசிகர்கள் அம்மா வீடியோ பாடல் வெளியாகி உள்ளதை கொண்டாடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Varisu movie Amma song video released


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->