'மாமன்னன்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? படக்குழு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மாமன்னன். இந்தப் படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிபதிவு செய்திருந்தார்.

இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்படி இந்த திரைப்படம் இதுவரை 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினின் 'மாமன்னன்’ திரைப்படம் NETFLIX ஓடிடி தளத்தில் வரும் ஜூலை 27ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanithi Stalin in mamannan movie OTT release on July 27


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->