வலைதளத்தில் வைரலாகும் 20 இயர்ஸ் ஆப் பிரபாஸ்..! - Seithipunal
Seithipunal


தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த வர்சம் என்ற படத்தின் மூலம் புகஸ்ப்பெற்றார்.

இதையடுத்து, இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த "பாகுபலி" "பாகுபலி 2" என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். 

பாகுபலி படத்தின் வெற்றிக்கு பின்பு இவருக்கு ரசிகர் பட்டாளம் குவியத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து இவர் நடித்த பல படங்கள் வசூல் ரீதியில் வெற்றி பெற்றது. தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆதிபுருஷ்' திரைப்படம் கூடிய விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில், நடிகர் பிரபாஸ் திரைத்துறையில் தடம் பதித்து இன்றுடன் 20 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், சமூக வலைதளத்தில் 20 இயர்ஸ் ஆப் பிரபாஸ் என்ற ஹேஸ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

twenty years of prabaas in ciniema trending hastek


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->