துணிவு, வாரிசு படங்களால்.. தியேட்டர்களுக்கு நோட்டீஸ்.! மீண்டும் கிளம்பிய சர்ச்சை.!  - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித்தின் துணிவு படமும் விஜயின் வாரிசு படமும் ஒரே நாளில் வெளியாகி இரு தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. 

8 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருவரின் படமும் ஒரே நாளில் வெளியாகி இருப்பது சுவாரஸ்யமான விஷயமாக பார்க்கப்படுகிறது. கடந்த ஜனவரி 11 - இல் வெளியாகிய துணிவு மற்றும் வாரிசு படங்கள் வசூல் மழையில் நனைந்து வருகின்றன.

இத்தகைய நிலையில் அஜித்தின் துணிவு படத்தின் சிறப்பு காட்சி நள்ளிரவு ஒரு மணிக்கு விஜயின் வாரிசு திரைப்படத்தின் சிறப்பு காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு திரையரங்குகளுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

ஏற்கனவே, துணிவு படம் பார்க்க போன ரசிகர் ஒருவர் லாரியிலிருந்து கீழே விழுந்து உயிர் இழந்து இருப்பது பெரும் சர்ச்சையாகி வருகின்ற நிலையில் இந்த அடுத்த அதிரடி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn Govt notties To theatre


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->