துணிவு பட ரசிகர்களுக்கு உற்சாக அறிவிப்பு.! தேதி குறித்த நிறுவனம்.!  - Seithipunal
Seithipunal


கடந்த ஜனவரி 11ம் தேதியன்று நடிகர் அஜித் நடித்து வெளியான துணிவு படம் சில வாரங்கள் கடந்த பிறகும் இன்னும் ஹவுஸ்புல்லாக இருக்கிறது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றும், வசூலில் முன்னணி இடத்தை பிடித்தும் வருகிறது. 

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கிய இந்த படத்தை ஸீ ஸ்டுடியோஸ் சார்பில் போனி கபூர் தயாரித்துள்ளார். இதில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ள நிலையில், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

வங்கி கொள்ளையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். 

இந்த நிலையில், தற்போது நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் துணிவு படம் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thunivu OTt Release date announcement


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->