தங்க மீன்கள் குட்டிபாப்பாவா இது.?! ஆத்தாடி., இளம்பெண்ணாகி அடையாளமே தெரியல.!
thangameenkal baby photo viral
ராம் இயக்கிய தங்க மீன்கள் திரைப்படம் தந்தை மகளுக்கு இடையேயான பாசத்தை அழகாக காட்டும். திரைப்படம் தந்தை மற்றும் மகளுக்கு இடையே இருக்கும் அன்பு பாசத்தை மிகவும் அழகாகவும், ஆழமாகவும் எடுத்துக்கூறும்.
இந்த திரைப்படம் பல விருதுகளை பெற்று சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றிக்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் கூட இதற்கு முக்கிய காரணம் படத்தில் மகளாக நடித்த சாதனா தான் என்று அனைவராலும் பாராட்டப்பட்டது.

மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து பேரன்பு திரைப்படத்தில் நடித்து இருந்தார். அதன்பின் அவர் என்ன ஆனார் எங்கு இருக்கிறார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
இந்த நிலையில், தங்க மீன்கள் படத்தில் நடித்தபோது எட்டு வயது குழந்தையாக இருந்த சாதனாவின் தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
English Summary
thangameenkal baby photo viral