வெளியானது தலைவர் 171 படத்தின் டைட்டில்.!
thalaivar 171 movie name announce
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த் த.செ.ஞானவேல் இயக்கிய வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
![](https://img.seithipunal.com/media/rajini lokesh-mhy4h.jpg)
சமீபத்தில் இந்தப் படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் ரஜினியுடன் ரன்வீர் சிங் மற்றும் நாகார்ஜூனா உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் டீசரை நேற்று மாலை ஆறு மணிக்கு படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, இந்தப் படத்திற்கு கூலி என்று தலைப்பிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் ரஜினி படத்தின் டீசர் வெளியானதை தொடர்ந்து கூலி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
English Summary
thalaivar 171 movie name announce