ஹிஜாப் விவகாரத்தில் அதிரடி மாற்றம்...! கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் அணியலாம்...! - கர்நாடக அரசு அனுமதி - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா, பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதில், கர்நாடகத்தில் முந்தைய ஆட்சிக் காலத்தில் கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகள் மற்றும் அணிகலன்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் குறித்து அரசு மறுபரிசீலனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் தங்களது மத நம்பிக்கையை பிரதிபலிக்கும் ஆடைகள் மற்றும் அடையாளங்களை அணிந்து கல்வி நிலையங்களுக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் ஹிஜாப், பூணூல், கைகளில் கட்டப்படும் புனிதக் கயிறுகள், ருத்ராட்ச மாலைகள், தலைப்பாகைகள் உள்ளிட்ட மத அடையாளங்களை மாணவர்கள் அணியலாம் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கும் முழுமையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்த புதிய உத்தரவு நடப்பு கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்றும், அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகள் மற்றும் மதச்சார்பின்மை கொள்கைகளுக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த உத்தரவு கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கட்டாயமாக பொருந்தும் என்றும், மத அடையாள ஆடைகள் அணிந்து வரும் மாணவர்களை கல்வி நிறுவனங்கள் தடுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற நுழைவுத் தேர்வுகளில், பூணூல் அணிந்திருந்த சில மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படாத சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாது என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், மாணவர்களை கட்டாயப்படுத்தி மத அடையாள ஆடைகள் அணிய வற்புறுத்தவும் கூடாது; அதைப் போலவே அவற்றை அகற்றுமாறு கூறவும் இயலாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் தேசிய மற்றும் மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகளின் போது, ஆடை தொடர்பான விதிமுறைகளை அந்தந்த தேர்வு ஆணையங்களே தனித்தனியாக தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dramatic change hijab issue Muslim students wear educational institutions Karnataka government approves


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->