சூர்யாவுடன் இணையும் துல்கர் சல்மான்.. இயக்குனர் யார் தெரியுமா? வெளியான அசத்தல் தகவல்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா-துல்கர் சல்மான் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நிகராக இருப்பவர் சூர்யா. தற்போது இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா 13 கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

மேலும், வரலாற்று பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படம் 3டி-யில்  எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.

தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி சமீபத்தில் கங்குவா படத்தின் க்ளைம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் விடுதலை 2 படத்தில் பிசியாக உள்ளார்.

அதன் காரணமாக நடிகர் சூர்யா வேறொரு படத்தில் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சூரரைப்போற்று திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன், பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Surya and Dulgar salman act in Sudha kongara movie


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->