'சூர்யா 43' திரைப்படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்! - Seithipunal
Seithipunal


தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தனது நடிப்பிலும் வித்தியாசமான கதாபாத்திரத்திலும் ரசிகர்களிடையே நீங்க இடம் பிடித்துள்ளார். 

பல படங்களில் தற்போது நடித்து வரும் சூர்யா சுதா கொங்காரா இயக்கத்தில் தனது 43 வது திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, 'சூர்யா 43' திரைப்படத்தின் பாடல் ரெக்கார்டிங் தொடங்கியுள்ளதாகவும் முதல் ரெக்கார்டிங் வெற்றிகரமாக பாடகி 'தீ' வுடன் தொடங்கியுள்ளதாகவும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

surya 43 movie update


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->