சமந்தா,பகத் பாசில் தொடர்ந்து.." அரிய வியாதியால் அவதிப்படுகிறேன் " - நடிகை அடா சர்மா! - Seithipunal
Seithipunal


அரிய வியாதியால் அவதிப்படுகிறேன். எனது உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதற்காக நான் சிகிச்சை எடுத்து வருகிறேன் என நடிகை அடா சர்மா கூறியுள்ளார்.

தமிழில் இது நம்ம ஆளு , சார்லி சாப்ளின் 2 ஆகிய படங்களில் நடித்தவர் அடா சர்மா. சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி படத்தில் நடித்ததன் மூலம் இந்திய சினிமாவில் பிரபலமானர்.

இந்த நிலையில் அறிய வியாதியால் அவதிப்படுவதாக அடா சர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது எனக்கு "எண்டோ மெட்ரியோசீஸ் " என்ற அரியவகை வியாதி ஏற்பட்டுள்ளது. இதனால் எனது உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதற்காக சிகிச்சை எடுத்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.


கேரளா ஸ்டோரி படத்தில் ஒல்லியாக இருந்தேன். அதன் பிறகு இன்னொரு படத்துக்காக உடல் எடையை கூட்ட தினமும் அதிகம் சாப்பிட்டேன். ஒரு நாளைக்கு ஒரு டேசன் வாழைப்பழங்கள் சாப்பிட்டேன். தூங்குவதற்கு முன்பு லட்டு சாப்பிட்டேன். இதனால் எனது உடல் தோற்றம் மாறியது. அதோடு அரிய வியாதியும் வந்தது. இதன் காரணமாக இடுப்பு வலி ஏற்பட்டு நரக வேதனையை அனுபவித்து வருகிறேன்.

ஏற்கனவே நடிகை சமந்தா,நடிகர் பகத் பாசில் ஆகியோர் அரிய வியாதியால் அவதிப்படுவதாக தெரிவித்துள்ள நிலையில் நடிகை அடா சர்மாவும் அதே மாதிரியான வியாதி  இருப்பதாக குறிவுள்ள  தகவல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suffering from a rare disease actress Adah Sharma


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->