எஸ்.வீ. சேகரின் மகன் இந்த பட ஹீரோவா.?வெற்றிக்காக  போராடி காணாமல் போன வாரிசு நடிகர்கள்! - Seithipunal
Seithipunal


சினிமாவில் பிரபல நட்சத்திரங்களின்  வாரிசுகளாக இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் எளிதாக கிடைத்து விடும். ஆனால் தங்கள் நடிப்பு திறமைகளின் மூலம் ரசிகர்களின் மத்தியில்  புகழ்பெற்று வெற்றிகரமான நட்சத்திரங்களாக வலம் வருவதற்கு அவர்களது திறமை முக்கிய காரணமாக அமைகிறது. சினிமா துறையில் பிரபல  நட்சத்திரங்களின் வாரிசுகளாக இருந்தும் சாதிக்க முடியாமல் போன ஐந்து வாரிசு நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

ஆனந்த் பாபு:  


தமிழ் சினிமாவின்  முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த நாகேஷின்  மகன்தான் ஆனந்த் பாபு. டான்சர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர்  பல வெற்றி படங்களை கொடுத்தார். நல்ல நடிப்பு திறமையும் நடன திறமையும் கொண்ட இவர் மதுப் பழக்கத்தினால்  சினிமாவில் ஜெயிக்க முடியாமல் போனது.

மனோஜ்:  
இயக்குனர் பாரதிராஜாவின் மகனான இவர் உதவி இயக்குனராகப் பணியாற்றி தாஜ்மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தாலும்  இவருக்கு போதுமான அளவு வரவேற்பு ரசிகர்களிடம் கிடைக்கவில்லை. தற்போது துணை நடிகராக ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

சக்தி

தொட்டால் பூ மலரும் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சக்தி. இவர் பிரபல இயக்குனர் பி வாசுவின் மகன். குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது சினிமாவில் துணை நடிகராகவும் நடித்து வந்த இவர்  பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார் .

 சாந்தனு

நடிகர் மற்றும் பாக்யராஜின் மகனான இவர் வேட்டியை மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். சக்கரக்கட்டி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார். எனினும் இவரால் முன்னணி கதாநாயகராக வர முடியவில்லை. தற்போது வரை போராடிக் கொண்டுதான் இருக்கிறார்.

அஸ்வின்: 

தமிழ் சினிமாவில் கதாநாயகன் மற்றும்  குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்ற எஸ்வி சேகரின் மகனான இவர் வேகம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு ரஜினி கமல் போன்ற பெரிய நட்சத்திரங்கள் சிபாரிசு செய்தும்  ஜெயிக்க முடியாமல் திணறி வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Successor actors who are still struggling to find a place in industry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->