உடன் பிறவா சகோதரரை வைத்து மாஸ் காண்பித்த சூரி.. கொண்டாட்டத்தில் தமிழர்கள்.!! - Seithipunal
Seithipunal


மதுரையை சொந்த ஊராக கொண்ட நடிகர் சூரி. இவர் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நாயகனாக வளம் வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் நடித்துள்ளார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. 

நடிகர் சூரி வாழ்க்கையில் பல கஷ்டங்கள்பட்டு, தற்போது திரையுலகில் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். 

ஊரடங்கில் படப்பிடிப்பு இரத்தாகி இல்லத்தில் இருந்தாலும், விழிப்புணர்வு தொடர்பான பல வீடியோ காட்சிகளை பதிவு செய்து வருகிறார். மேலும், தனது குழந்தைகளுடன் நேரத்தை போக்கி வருகிறார். 

இந்த நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தனது காளை மாட்டினை சுத்தம் செய்ய கண்மாய்க்கு அழைத்து செல்வதை பதிவு செய்துள்ளார். இது குறித்த பதிவில், " ஊரடங்குக்கு நடுவுல, ஊரே அடங்கி நிக்கும் - எங்க "கருப்பன்" நடந்து போனா " என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்த பதிவு வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Soori twit about his Kaalai


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->