அடித்து நொறுக்கப்பட்ட யூடியூப் அலுவலகம்!...அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கடும் ஆவேசம்!...நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் பகுதியில் ஒரு தனியார் யூடியூப் சேனல் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு எதிரான படங்களை யூடியூப் சேனலில் அடிக்கடி வெளியிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அல்லு அர்ஜுன் ரசிகர்கள் யூடியூப் அலுவலகத்திற்குள் புகுந்து, அங்கிருந்த ஊழியர்களை வெளியேற்றி அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்களை சரமாரியாக அடித்து நொறுக்கிய அதிர்ச்சி சம்பம் அரங்கேறி உள்ளது.

இதற்கிடையே, தெலுங்கானா மாநிலத்தில் கடந்த தேர்தலின் போது தனது நெருங்கிய நண்பரான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு அல்லு அர்ஜுன் பகிரங்கமாக ஆதரவு அளித்து இருந்தார்.

மேலும், ஜனசேனா கட்சியின்  தலைவரும் அல்லு அர்ஜுனின் மாமாவுமான பவன் கல்யாண் தெலுங்கு தேசம் கூட்டணியில் இருக்கும் போது அல்லு அர்ஜுன் எதிர் தரப்பை சேர்ந்த வேட்பாளருக்கு ஆதரவு அளித்தது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், யூடியூப் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய அல்லு அர்ஜுன் ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Smashed you tube office allu arjun fans freak out what happened


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->