சிம்புவின் அடுத்த படத்திற்கு இசையமைப்பாளர் இவர்தான்.! வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


சிம்பு நடிக்கும் கொரோனா குமார் திரைப்படத்திற்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வளம் வருபவர் சிம்பு. இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் சிம்பு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து நடிகர் சிம்பு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் கொரோனா குமார் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸ் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Simbu in corona kumar movie update


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->