பொங்கல் உடையில் உணர்ச்சி பொங்க புகைப்படம் வெளியிட்ட ஷிவானி.! உச்சக்கட்ட உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழில் நிறைய சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். விஜய் டிவியின் பகல் நிலவு சீரியல் இவருக்கு மிக முக்கியமான சீரியலாகும்.

இந்த சீரியலில் நடித்த ஹீரோவுடன் ஷிவானிக்கு காதல் என்று பல்வேறு கிசுகிசுக்கள் கிளம்பியது. பகல் நிலவு சீரியலிலும் இவர்களது ரொமான்ஸ் ரசிகர்களை கவரும் விதமாக இருக்கும். இதை கண்ட பலரும் இவர்கள் நடிக்கவில்லை. நிஜமாகவே ரொமான்ஸ் செய்கிறார்கள் என்று கிசுகிசுத்தனர்.

இத்தகைய நிலையில் தான் அவருக்கு பிக்பாஸில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த வாய்ப்பை ஷிவானி சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் பகல் நிலவு சீரியலின் கதாநாயகன் ஹஸீமுக்கு விவாகரத்தானது.

இதற்கு ஷிவானி தான் காரணம் என்று கூட பலரும் பழிபோட்டனர். இருப்பினும் அஸீம் இதுகுறித்து ஷிவானி எனக்கு தோழிதான். அவருக்கும் என்னுடைய அந்தரங்க பிரச்சனைகளுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்.

எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை ஷிவானி நாராயணன் வெளியிட்டு வருவார். அந்த வகையில் அவருக்கு விளம்பரங்கள் மூலம் நிறைய லாபமும் கிடைக்கிறது. தற்போது, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொங்கல் உடையில் அழகான புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shivani 2022 pongal Photo Viral


கருத்துக் கணிப்பு

டி20 உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும்?Advertisement

கருத்துக் கணிப்பு

டி20 உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும்?
Seithipunal