லாஸ்லியாவை கலாய்த்த சாண்டி.,கொந்தளித்த கவின்.! பாய்ஸ் கேங்கில் டமால்.,டுமீல்.! - Seithipunal
Seithipunal


இந்த வார கேப்டனாக லாஸ்லியா தேர்வு செய்யப்பட்டார். கேப்டன் பதவிக்கான போட்டியில் இருந்து வனிதாவும், தர்ஷனும் விளையாடாமல் விலகினர். இதன் காரணமாக, முதன்முறையாக பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக லாஸ்லியா பதவியேற்றார். ஆட்கள் பற்றாக்குறையால் அனைத்து வேலையும் அனைவரும் செய்ய வேண்டும் என லாஸ்லியா தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில், பாய்ஸ் கேங்கில் விரிசல் ஏற்பட்டது காட்டப்பட்டுள்ளது. பாய்ஸ் கேங் உட்கார்ந்து காபி குடித்து கொண்டிருக்கையில், லாஸ்லியா காபி குடித்து முடித்த ஆட்கள் எல்லாம் வாருங்கள் வேலை இருக்கிறது என அழைக்கிறார்.

losliya, seithipunal

அதற்கு சாண்டி, எப்பொழுதும் போல "நீ கேப்டன் என்றவுடன் உடனே, வா போய் அதை செய்யலாம், இதை செய்யலாம் என சொல்லாதே" என கூறுகிறார். அதற்கு லாஸ்லியா, "எக்ஸ்க்யூஸ் மீ எப்பொழுதும் போல நான் என் வேலையை தான் செய்கிறேன். "என லாஸ்லியா கூற, அதற்கு சாண்டி "யாரும், காபி குடித்த உடனே வா என கூப்பிடவில்லை." என பதிலடி தருகிறார்.

இதன் காரணமாக, "நீங்கள் வரத்தேவையில்லை. யாரும் வரவேண்டாம்." என மீண்டும், மீண்டும் கூறியவாறு அங்கிருந்து செல்கிறார். இதற்கு சாண்டி "லாஸ்லியா கோபித்துக் கொண்டாயா?" என கேட்க எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்கிறார். இதன் காரணமாக மீது கோபப்பட்ட கவின்,"ஜாலி, ஜாலி என அவளை காயப்படுத்திக் கொண்டே இருக்கிறாய்." என கொந்தளித்தார்.

காதலிக்காக தன்னுடைய நண்பன் இப்படி கூறுகிறானே என சாண்டி மிகவும் பீல் பண்ணுகிறார். இந்த சம்பவங்களை பார்த்து முகேனும், தர்ஷனும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அதற்கான ப்ரோமோ வீடியோ:


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sandy kavin fight in biggboss


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal