இயக்குனரை 2வது திருமணம் செய்துகொண்ட சமந்தா.. ஈஷா யோகா மையத்தில் நடந்த ரகசிய திருமணம்! - Seithipunal
Seithipunal


நடிகை சமந்தா பிரபல இயக்குநர் ராஜ் நிடிமோருவை கோவை ஈஷா யோகா மையத்தில் திருமணம் செய்துகொண்டார் என்ற தகவல் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி பெரும் சர்ச்சையையும் ஆர்வத்தையும் கிளப்பியுள்ளது. இந்தக் கதனங்களைத் தொடர்ந்து சமந்தா திருமண புகைப்படங்களை வெளியிட்டதாகவும் சில இணையத் தளங்கள் கூறியிருந்தாலும், இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.

முன்பு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட சமந்தா, 2021ஆம் ஆண்டு இருவரும் மனம் ஒத்து பிரிந்தது அனைவரும் அறிந்த விஷயம். அந்த விவாகரத்துக்குப் பிறகு, சமந்தா இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் நெருக்கமாக உள்ளார் என்ற வதந்திகள் தொடர்ந்து பரவி வந்தன. குறிப்பாக, தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் வெளியான காலத்தில் இப்படிப்பட்ட கிசுகிசுக்கள் அதிகரித்தன.

இந்நிலையில், டிசம்பர் 1ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் இருவரும் அமைதியான முறையில் திருமணம் செய்து கொண்டார்கள் என சில வட்டாரங்கள் கூறுகின்றன. சமந்தா அங்கே இருந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இதுவே வதந்திகளை மேலும் தூண்டும் வகையில் இருந்தது.

முன்னதாக நடிகை சம்யுக்தா இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால், தற்போது சமந்தாவும் மீண்டும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் தகவல் அதிகம் பேசப்பட்டது. நாக சைதன்யா தற்போது நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துகொண்டுள்ளார் என்ற செய்தி வந்ததைத் தொடர்ந்து, சமந்தா வாழ்க்கையிலும் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

எனினும், சமந்தா அல்லது ராஜ் நிடிமோரு இருவரும் இந்த திருமண தகவலை உறுதி செய்யவோ மறுக்கவோ இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. அதிகாரப்பூர்வ தகவல் இல்லாததால், இந்த செய்தி சமூக ஊடகங்களில் பரவும் வதந்தியாகவே பார்க்கப்படுகிறது.

சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சார்ந்த இந்த தகவல்கள் உண்மைதானா அல்லது வதந்தியா என்பது குறித்து தெளிவான தகவல் வருவதற்குத் தொடர்ந்தும் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Samantha marries director for the second time Secret wedding held at Isha Yoga Center


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->