வித்தியாசமான போஸ்... ரித்விகா செய்த வேலை.! நெட்டிசன்கள் "குபீர்..".!  
                                    
                                    
                                   rithvika new photos update 
 
                                 
                               
                                
                                      
                                            இயக்குனர் ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் ரித்விகா. அவர் நடித்த முதல் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றால் அதன் பின்னர் ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன்பின்னர் விஜய் டிவி அவருக்கு பிக் பாஸ் சீசன் 2 இல் கலந்து கொள்ள வாய்ப்பு கொடுத்தது. அதிலும், அவர் கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் நுழைந்தவுடன் மிகவும் அமைதியாக இருப்பதைப் பார்த்துவிட்டு இவர் விரைவில் வெளியேறி விடுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், இவர் இறுதிவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து பட்டத்தை வென்றார். அதன் மூலம் இன்னும் பிரபலம் ஆனார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரித்விகாவிற்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. 
இந்நிலையில், எப்போதும் சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக இருக்கும் ரித்விகா தற்போது மிகவும் வித்தியாசமான முறையில் போஸ் கொடுக்கிறேன் என்று ஒரு மாதிரியான தோற்றத்தில் போஸ் கொடுத்துள்ளார். அதனை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். காண்போருக்கு சிரிப்பை வரவழைக்கும் விதமாக அது அமைந்துள்ளது.
 
                                     
                                 
                   
                       English Summary
                       rithvika new photos update