பிக்பாஸ்-4 ல் அந்த ஹாட் நடிகையா.?! படுகுஷியில் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


ஜோக்கர் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அந்த படத்திற்கு பிறகு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து சமுத்திரகனியின் ஆண்தேவதை என்ற படத்தில் ரம்யா பாண்டியன் நடித்திருப்பார். இந்த இரண்டு படங்களிலுமே அவரின் நடிப்பு அபாரமாக இருந்தது. இதனால் பலராலும் ரம்யா பாண்டியன் பாராட்டப்பட்டார். 

தற்போது சூர்யா தயாரிக்கும் படத்திலும், சி.வி குமார் தயாரிக்கும் படத்திலும் அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இவர் நடித்த திரைப்படங்களை விட இவர் நடத்திய மொட்டைமாடி போட்டோ ஷூட்கள்தான் ரம்யா பாண்டியன் புகழை உலகெங்கும் எடுத்துரைத்தது. இவருடைய இடுப்பு போஸ்க்கென்று தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது. 

ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு எதுவும் இல்லாமல் வீட்டிலேயே குடும்பத்தினருடன் தன்னுடைய பொழுதை கழித்து வரும் ரம்யா, அவ்வப்போது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றார். இந்நிலையில், அவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடுவார். 

அப்படி சமீபத்தில் அவர் உரையாற்றிய போது அடுத்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துகொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியது உண்மையா என்று ஒருவர் கேட்டதற்கு, "எனக்கு எந்தவிதமான தொடர்பும் வரவில்லை. அப்படி யாராவது தொடர்பு கொண்டால் தான் என்னால் கூறமுடியும். போக முடியும்." என்று தெரிவித்துள்ளார்.  ஒருவேளை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அழைப்பு வந்தால் நிச்சயம் தான் செல்வேன் என்பதை ரம்யா பாண்டியன் மறைமுகமாக தெரிவித்துள்ளார். அவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்திற்கு நிச்சயமாக அவர் பிக்பாஸ் நான்கில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ramya pandiyan may be participate in biggboss-4 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->