பிறந்த நாளில் நள்ளிரவில் ரஜினி வீட்டு முன் ரசிகர்கள் சர்ப்ரைஸ்.! வைரல் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


ரஜினிகாந்த் இன்று அவரது 73 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுகின்றார். ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் ரஜினி ரசிகர்கள் பிரம்மாண்டமாக அவரது பிறந்தநாளை கொண்டாடுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த வருடம் திருச்சியில் சில பகுதிகளில் ரத்ததான மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே தனது பிறந்த நாளில் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து வருவார்.

அந்த வகையில், இந்த ஆண்டும் அவர் ரசிகர்களை சந்திக்கவுள்ளார். ஆனால், இந்த ஆண்டு அதிசயமாக தனது வீட்டில் மேடை அமைத்து வீட்டிற்குள் ரசிகர்களை சந்திக்க இருக்கிறார்.

இந்த நிலையில், ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நள்ளிரவு 12 மணிக்கு ரஜினியின் வீட்டிற்கு முன்பாக ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajini fans Cut Cake Infront of Rajini House


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->