மீண்டும் திரைக்கு வரும் விஜய் - அஜித் சேர்ந்து நடித்த திரைப்படம்.. என்ன படம் தெரியுமா?
Rajavin parvaiyile movie release in theatre
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் நடித்துள்ள துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், பொங்கலுக்கு முன்பாக அஜித்-விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது அஜித்- விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'ராஜாவின் பார்வையிலே' திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதன்படி சென்னை ஏஜிஎஸ் திரையரங்கில் 6ம் தேதி முதல் 10ஆம் தேதி வரை இப்படம் திரையிடப்பட உள்ளதாக 'புக் மை ஷோ' ஆப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1995ம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்குனர் ஜானகி சௌந்தர் இயக்க, இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித், விஜய் இந்திராஜா, வடிவுக்கரசி, வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
English Summary
Rajavin parvaiyile movie release in theatre