நினைக்கவே மனம் கூசுகிறது! ......... டேஷ் போட்டு டிவிட் போட்ட இயக்குநர் பார்த்திபன்! - Seithipunal
Seithipunal


நடிகர், இயக்குநர் பார்த்திபன் விடுத்துள்ள டிவிட்டர் செய்திக்குறிப்பில், "வணக்கம் நண்பர்களே! இரவின் நிழல் படத்தின் making-ஐ என் Radhakrishnan parthiban YouTube channel மூலமாக வெளியிட முடிவெடுத்திருக்கிறேன். புதிய channel என்பதால் பிரபலங்கள் மூலமாக பிரமாதமாக விளம்பரபடுத்தி வெளியிடலாம் என அறிவார்ந்தோர் கூறியதால்-உங்கள் முன் அக்கோரிக்கையை வைக்கிறேன்.

முகவரியற்றிருந்த என்னை பிரபலபடுத்தியது நீங்கள் தானே Content தான் ஈர்க்கவல்லது. இரவின் நிழல் making எதிர்பார்ப்பிற்கு உள்ளாயிருப்பது என்பதால் இம்முடிவிற்கு வந்திருக்கிறேன். பார்த்த சிலர் பார்க்கும்படி பலரிடம் கூற, ஒரு சாதனை அரங்கேறும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

நாளையே கூட அரிசியில் பொறுக்கி கல் ஒதுக்கிவிட்டு சமைப்போம், அப்படி சமூக வளைத்தளங்களிலும் சில -……… (முகம் முழுக்க அசிங்கத்தை முகமுடியாய் அணிந்தபடி) அருவருப்பான வார்த்தைகளை பிரயோகிக்கும் போது ஒதுக்கிவிடுகிறேன் நான். அவர்களுக்கு “பிடிக்கவில்லை”என்ற கருத்தை வரவேற்கிறேன். ஆனால் அதை கெட்ட வார்த்தைகளால் எழுதும்போதுதான் மனம் வலிக்கிறது. 

என் வளர்ச்சிக்காக, முழுமனதாக, அழகாக, கவிதையாக, வாழ்த்துவதாக எழுதும் பல நல்ல உள்ளங்கள் அதை (கேடுகெட்ட negativity) எப்படி தவிர்க்கிறீர்கள்/ தவிக்கிறீர்கள் என்பதை நினைக்கவே மனம் கூசுகிறது!" என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Radhakrishnan Parthiban twit


கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?Advertisement

கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?
Seithipunal