விஜயின் திரைப்பயணத்தில் 'லியோ' சிறந்த படமாக இருக்கும்.. படத்தின் தயாரிப்பாளர் பெருமிதம்.!
Producer lalith kumar speech about Leo movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லியோ படத்தில் நடிகர் விஜய்யுடன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர் மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், நடிகை பிரியா ஆனந்த், த்ரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் , தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இதனையடுத்து 'லியோ' படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி சமீபத்தில் நடிகர் சஞ்சய் தத் மற்றும் அர்ஜூனின் பிறந்தநாளையொட்டி க்ளைம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்த நிலையில் லியோ திரைப்படம் வெளியாக இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் வைத்து நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் லியோ திரைப்படம் குறித்து பேசிய படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார், விஜயின் சினிமா வாழ்க்கையில் லியோ திரைப்படம் ஒரு சிறந்த திரைப்படமாக இருக்கும். அதிலும் லியோ படத்தில் 8 நிமிட இடைவேளை காட்சியை பார்த்த போது எங்களுக்கே புல்லரித்து விட்டது. இந்த காட்சியை திரையரங்குகளில் ரசிகர்கள் பார்க்கும் போது கண்டிப்பாக கொண்டாடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Producer lalith kumar speech about Leo movie