பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் மற்றும் நடிகர் கொரோனாவிற்கு மரணம்! சோகத்தில் தமிழ் திரையுலகம்!  - Seithipunal
Seithipunal


பல வெற்றிப்படங்களை தயாரித்த நிறுவனம் லட்சுமி மூவி மேக்கர்ஸ். இந்த நிறுவனத்தை 3 பேர் இணைந்து நடத்தி வந்தனர். மூவரில் ஒருவரான சுவாமிநாதன் இன்று மரணமடைந்தார். 

உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன், பகவதி, உன்னை நினைத்து, அன்பே சிவம், உன்னைத்தேடி என பல வெற்றிப்படங்களை லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர். வி.சுவாமிநாதன் தயாரிப்பாளர் மட்டும் இல்லாமல் ஒரு சில படங்களிலும் நடத்திருக்கிறார். 

அவருடைய மகன் அஸ்வின் ராஜா பாஸ் (எ) பாஸ்கரன் படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த ஊரடங்கு காலத்தில் தான் அஸ்வினுக்கு சுவாமிநாதன் திருமணம் செய்து வைத்தார். 

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு உறுதியானதால், கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் சுவாமிநாதன். 
 
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று  சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். இவரது மரணம் தமிழ் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு பலரும்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

producer come actor LMM swaminathan passes away covid19


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->