ராசியான தங்க தகடு விற்பதாக கூறி மோசடி; 48 லட்சம் பணத்தை இழந்த நபர்; 02 காவலர்கள் உட்பட 8 பேர் கைது..! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் தங்க தகடு விற்பதாக கூறி 48 லட்சம் மோசடி செய்து ஏமாற்றிய வழக்கில் 02 காவலர்கள் உட்பட 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி காவல் நிலைய சரகத்தில், தங்க தகடு விற்பதாக கூறி ரூ.48 லட்சம் மோசடி செய்ததாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா கீழப்புதூர் ஒச்சாத்தேவர் தெருவைச் சேர்ந்த பால் ஆனந்த சீலன் மகனான 34 வயது சுமித் ராபர்ட் பால் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.

குறித்த புகார் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார், உத்தரவின்பேரில் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்படி, நிலக்கோட்டை உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் இளஞ்செழியன் அவர்களின் தலைமையில், பட்டிவீரன்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் முத்துக்குமரன், சார்பு ஆய்வாளர் வாணி மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினை அமைத்து விசாரணை செய்து எதிரிகளை தேடிவந்த நிலையில் கீழ்க்கண்ட எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

01. சங்கரமூர்த்தி (50), த.பெ. சண்முகம், கனரா வங்கி அருகில், பட்டிவீரன்பட்டி

02. நாகராஜ் (47), த.பெ.பால்ச்சாமி, மஞ்சளாறு அணை, தேவதானப்பட்டி, தேனி

03. கருப்பையா (36), த.பெ.சிதம்பரம், மஞ்சளாறு அணை, தேவதானப்பட்டி, தேனி

04. சுரேஷ்(38), த.பெ.முருகன், மஞ்சளாறு அணை, தேவதானப்பட்டி, தேனி

05. முத்துப்பாண்டி, த.பெ.காசி, குறும்பப்பட்டி, வத்தலக்குண்டு

06. குப்புசாமி (40), த.பெ.சுப்ரமணி, ராசிமலை, மஞ்சளாறு அணை, தேனி

07. தங்கராஜ், (காவலர்), ஜெயமங்கலம் காவல்நிலையம், தேனி

08. கதிரேசன் (காவலர்) தென்கரை காவல்நிலையம், தேனி

மேற்படி எதிரிகளிடமிருந்து பணம் ரூ.6 லட்சம், கார் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்று ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காவல்துறை விசாரணையில் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய சரகம் கனரா வங்கி அருகில் வசித்து வரும் சண்முகம் மகன் சங்கரமூர்த்தி (50) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் மூலம் பழக்கமாக இருந்து வந்துள்ளனர். 

சங்கரமூர்த்தி அம்பிளிக்கை மின்வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். மேலும், சங்கரமூர்த்தியும் மாவட்டம் தேவதானப்பட்டி மஞ்சளாறு அணையைச் சேர்ந்த பால்ச்சாமி மகன் நாகராஜ் (47) என்பவரும் சிறுவயது முதலே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

அடுத்து, சுமித் ராபர்ட் பால் என்பவரிடம் அதிக அளவில் பணப்புழக்கம் இருப்பதை அறிந்த சங்கரமூர்த்தி, நாகராஜ் மற்றும் மஞ்சளாறு அணையைச் சேர்ந்த சிதம்பரம் மகன் கருப்பையா (36), முருகன் மகன் சுரேஷ் (38), குறும்பபட்டியைச் சேர்ந்த காசி மகன் முத்துப்பாண்டி, ராசிமலையைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் குப்புசாமி (40) ஆகியோர் ஒன்றிணைந்து, தங்களிடம் விலை உயர்ந்த ராசியான தங்கத்தகடு இருப்பதாகவும், அதனை அதிக விலைக்கு விற்பனை செய்யலாம் எனவும் சுமித் ராபர்ட் பாலிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.

அவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பிய சுமித் ராபர்ட் பால், கடந்த 16.05.2026 அன்று பட்டிவீரன்பட்டி ஓம் சக்தி கோவில் தெருவில் வைத்து ரூ.48 லட்சம் பணத்தை சங்கரமூர்த்தியிடம் வழங்கியுள்ளார். பின்னர், தங்கத்தகடு நாகராஜிடம் இருப்பதாகக் கூறி, சங்கரமூர்த்தி அவரை காரில் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நாகராஜ், குப்புசாமி மற்றும் சுரேஷ் ஆகியோர் இருந்த நிலையில், அவர்களிடம் பணத்தை வழங்கி தங்கத்தகடை பெற்றுக்கொண்டு சுமித் ராபர்ட் பால் காரில் திரும்பி வந்துள்ளார்.

அப்போது, ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் தங்கராஜ் மற்றும் தென்கரை காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் கதிரேசன் ஆகிய இருவரும் தேவதானப்பட்டியில் வாகன சோதனை செய்வது போல் காரை வழிமறித்து சோதனை செய்துள்ளனர். 

அப்போது காரில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாகக் கூறி வாகனத்தின் உள்ளே இருந்த தங்கதகடை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர். இதனால் பயந்து போன புகார்தாரர் காவல் நிலையம் செல்லவில்லை உடனே நாகராஜை அழைபேசியில் தொடர்பு கொண்ட போது, சம்பந்தப்பட்ட காவலர்கள் தனக்கு தெரிந்தவர்கள் என்றும், தான் பார்த்துக்கொள்வதாகவும் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், முத்துப்பாண்டி, நாகராஜ், சங்கரமூர்த்தி, கருப்பையா, சுரேஷ், குப்புசாமி மற்றும் இரண்டு காவலர்கள் ஆகியோர்கள் சேர்ந்து ரூ.48 லட்சம் பணத்தை தங்களுக்குள்ளாக பிரித்துக் கொண்டுள்ளனர். அதனை தொடர்ந்து சுமித் ராபர்ட் பால் தான் வழங்கிய ரூ.48 லட்சம் பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் தராமல் ஏமாற்றியுள்ளார்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்துள்ளார். புகாரினைத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து மேற்படி எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை சில மணிநேரங்களிலேயே கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார், வெகுவாக பாராட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Eight people including two police officers have been arrested for swindling rs 48 lakh by claiming to sell gold plates


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->