வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்துமா..? ஒரே நாளில் 50 சென்டிமீட்டர் வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்திற்கு அதிக மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை காலம் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு தமிழகத்தில் இயல்பைவிட அதிக மழை பதிவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, நவம்பர் மாதத்தில் இயல்பைவிட சுமார் 60 சென்டிமீட்டர் வரை கூடுதல் மழை பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில் முக்கியமாக ஒரே நாளில் 50 சென்டிமீட்டர் வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளமை பீதியை கிளப்பியுள்ளது.

அதிலும், குறிப்பாக சென்னை உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஏதேனும் ஒரு பகுதியில், இத்தகைய அதீத மழைப்பொழிவு பதிவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு சூப்பர் எல் நினோவின் இரண்டாம் கட்ட தாக்கம் காரணமாக இருக்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

முதற்கட்டத்தில் வறட்சி மற்றும் மழைப்பொழிவு குறைவு ஏற்பட்ட நிலையில், அக்டோபர் 15-ஆம் தேதிக்குப் பிறகு வடகிழக்கு பருவமழையில் மாற்றம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. இதனிடையே, கடல் பரப்பின் வெப்பநிலையும் இயல்பைவிட அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு கடல் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம், வளிமண்டலத்தில் ஈரப்பதத்தை அதிகரித்து, கனமழைக்கான சூழலை உருவாக்கக்கூடும் என்பதால், வரும் வடகிழக்கு பருவமழை, தமிழகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசும் தயாராகி வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் நீர்நிலைகள், நீர்வழித்தடங்களை சீரமைத்தல், பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதற்காக போதிய நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை விரைவுபடுத்தினால், கனமழையால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கட்டுப்படுத்த முடியும் என துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will the Northeast Monsoon cause severe impact in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->